Ticker

6/recent/ticker-posts

Ad Code

இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்

...


|ஜூலை 12,2020


இந்திய ரயில்வேயை நூறு சதவீதம் மின்மயமாக்கலுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார் என மத்தியரயில்வே துறைஅமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.

 இந்தியா குளோபல் வீக் 2020 நிகழ்ச்சியில் அமைச்சர் பியூஷ்கோயல் வீடியோ கான்பரன்சிங் முறையில் பேசியதாவது: நாடு முழுவதும் உள்ள 1,20 ஆயிரம் கி.மீ முழுவதையும் நூறு சதவீதம் அளவிற்கு மின்மயமாக்கல் ஆக்குவதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்து உள்ளார். வரும் 2030 ம் ஆண்டில் உலகின் முதல் 100 சதவத பசுமை ரயில்வேயாக மாற்ற விரும்புகிறோம்.

வரலாற்று ரீதியாக இந்தியா பல்வேறு சவால்களை சந்தித்து உள்ளது. தற்போதைய சூழலில் இருந்து இந்தியா மீண்டு வருவதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன. அதே நேரத்தில் விரைவாக முன்னேறக்கூடிய திறனை நாங்கள் காட்டி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments