Ticker

6/recent/ticker-posts

Ad Code

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிர்வாகிகள் தேர்வு: புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கும் பணி தீவிரம்

நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த வாரம் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்தார். உடனடியாக விஜய், ‘‘எனது தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. என் ரசிகர்கள் யாரும் அந்தக் கட்சியில் இணையக் கூடாது’’ என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று விஜய் தரப்பில் அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாவட்ட அளவிலான புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments