Ticker

6/recent/ticker-posts

Ad Code

தாராவியில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா ; உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

...



|ஜூலை 11,2020

மும்பை : மஹாராஷ்டிராவின் தாராவி நகரில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹா.,முன்னிலையில் உள்ளது. மாநிலத்தில் நோய் பாதிப்பு அதிகமான பகுதிகளாக மும்பை, தாராவி உள்ளிட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதிகமான குடிசை பகுதிகளை கொண்ட தாராவியில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்தில் உள்ளது. சில நாட்களில் பாதிப்பு குறைந்து பின் மீண்டும் அதிகரித்து வந்தது. தற்போதைய நிலவரப்படி, மஹா.,வில் 2.50 லட்சம் பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தாராவி உள்ளிட்ட முக்கிய இடங்களில் தொற்று பரவல் குறைந்ததற்கு மும்பை நகராட்சியின் சிறந்த நடவடிக்கைகளும் முக்கிய காரணம். இந்நிலையில் மும்பை நகராட்சியின் சிறந்த சேவைக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

தாராவியில் நோய் தொற்றை கட்டுப்படுத்தியதற்கு மஹா.,முதல்வர் உத்தவ் தாக்கரே, சுகாதார வல்லுநர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பிறரை பாராட்டினார். இது போன்ற எடுத்துக்காட்டுகள் மக்களை நோய் பாதிப்புகளில் இருந்து வெளிக்கொண்டு வர தூண்டுதலாக அமையும். தாராவியின் கட்டுப்பாட்டு முயற்சி தான் உலகளாவிய பதிவுதான் கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துகிறது. கடந்த 6 வாரங்களில் பாதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது.

ஆயினும், அதிக பாதிப்புகள் இருந்தாலும் அதனை கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஏற்கனவே, தாராவியில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் குறைந்து இருப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments