...
|ஜூலை 11,2020
தெலுங்கானாவில் கொரோனா வைரசின் தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த முன்பை விட மாநிலத்தில் பரிசோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும் நடத்தப்படும் பரிசோதனை களின் எண்ணிக்கை 6000 வரை உயர்த்த முடியும் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி, ஐதராபாத், ரங்காரெட்டி மற்றும் மேட்சல் மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை (RAT) கருவிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரங்களில் சுகாதாரதுறை அதிகாரிகள், ஐதராபாத்தில் உள்ள 35 சுகாதார நிலையங்களிலும், ரங்காரெட்டி மாவட்டத்தில் 20 யுபிஎச்சியிலும், மேட்சலில் 10 இடங்களிலும் இந்த பரிசோதனை கருவிகளை சோதனை செய்ய துவங்கியுள்ளனர். மற்ற அனைத்து மாவட்டங்களிலும் சரியான நேரத்தில் சோதனைகளைத் தொடங்க முயற்சிகள் நடந்து வருகின்றன. கடந்த சில வாரங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையொட்டி, ஆரம்பத்தில் 3 மாவட்டங்களில் RAT கிட்ஸ்கள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்புகளை பொறுத்தவரை, இந்த 3 மாவட்டங்கள் தான் முன்னிலையில் உள்ளன. அதன்படி, ஐதராபாத்தில் (GHMC) கொரோனா பாதிப்பு 23,948 ஆகவும், ரங்காரெட்டியில் 1,941 ஆகவும், மேட்சலில் 1,190ஆகவும் உள்ளன.
சந்தேகத்திற்கிடமான நோயாளிகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு உயர்மட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சோதனையின் முடிவுகள் 30 நிமிடங்களுக்குள் கிடைக்கும். வரும் நாட்களில் ஐதராபாத்தில் மேலும் 15 சுகாதார நிலையங்களில் RAT கிட்ஸ் களுக்கான பரிசோதனை அதிகப்படுத்தப்படும். ஆரம்பத்தில், ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 30 முதல் 50 கிட்களை மட்டுமே சோதித்து வருகிறோம். சுகாதார மையங்களுக்குள் செல்லும் அறிகுறிகளின் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகியது. மேலும், ஒருமுறை பரிசோதிக்கப்பட்டால், அவற்றை உறுதி செய்ய மீண்டும் சோதனை செய்ய அவசியமில்லை. இருப்பினும், எதிர்மறையாக இருந்தால், பிசிஆர் (PCR) சோதனைக்கு உட்படுத்த வேண்டும்

0 Comments