Ticker

6/recent/ticker-posts

Ad Code

கொரோனா கோரத்தாண்டவம்.. தமிழகத்தில் அதிகரிக்கும் கேஸ்கள்.. உலகில் 5.68 லட்சத்தை தாண்டிய பலி



உலகம் முழுக்க கொரோனா வைரஸ் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக 138470 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. உலகம் முழுக்க இதனால் பலி எண்ணிக்கை 5.68 லட்சத்தை தாண்டி உள்ளது.



உலகம் முழுக்க கொரோனாவால் 12,442,037 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 568,587 ஐ தொட்டுள்ளது . குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7,512,787 ஆக உயர்ந்துள்ளது.

இந்த கொரோனா வைரஸால் இப்போது இந்தியா, பிரேசில், மெக்ஸிகோ,. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் பாதிப்பு அதிகமாக உள்ளது. உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 3,358,120 பேரை கொரோனா தாக்கியுள்ளது. அங்கு 137,429 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 61,719 பேர் பாதிக்கப்பட்டனர். 960 பேர் இறந்தனர். நேற்று ஒரே நாளில் 732 பேர் பலியாகினர்

தற்போது உலகிலேயே பிரேசில் நாட்டில் தான் கொரோனா பலி அதிகமாக உள்ளது. அங்கு இதுவரை 1,842,127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 71,515 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 968 பேர் இறந்துள்ளனர். ரஷ்யாவில் 727,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,335 பேர் பலியாகியுள்ளனர்.

Post a Comment

0 Comments