Ticker

6/recent/ticker-posts

Ad Code

பத்மநாபசாமி கோயிலில் திருவனந்தபுரம் ராஜகுடும்பத்துக்கு உரிமை உள்ளது - உச்சநீதிமன்றம்

    பத்மநாபசாமி கோயிலில் திருவனந்தபுரம் ராஜகுடும்பத்துக்கு உரிமை உள்ளது. தற்காலிகமாக மாவட்ட நீதிபதி தலைமையிலான குழு கோயில் நிர்வாகத்தைத் தொடரலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சில கூடுதல் விதிமுறைகளை வகுத்துள்ளதுடன், கோயிலை நிர்வகிக்க புதிய நிர்வாக குழு அமைக்கப்பட வேண்டும். அதுவரை நீதிபதி தலைமையிலான குழு நிர்வகிக்கும் என உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் அளித்துள்ளது.

இதுவரை திறக்கப்படாத ரகசிய அறையைத் திறப்பது குறித்து நிர்வாகக் குழுவே முடிவு எடுக்கலாம் என்றும், குழுவில் இந்து மதத்தினர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்றும்,  யூ.யூ.லலித், இந்துமல்கோத்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயில் சொத்துக்களை யார் பராமரிப்பது என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்து வருகிறது. பத்மநாப சுவாமி கோயில் நிர்வாகத்தை மாநில அரசின் கட்டுப்பாட்டில் எடுக்க அம்மாநில உயர்நீதிமன்றம் 2011ம் ஆண்டில் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி கோயிலில் உள்ள ஒரு அறையை தவிர பிற பாதாள அறைகள் திறக்கப்பட்டு சொத்துக்கள் கணக்கிடப்பட்டன. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் யு.யு லலித், இந்து மல்ஹோத்ரா அடங்கிய அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. நாட்டின் பணக்கார கோயிலான பத்மநாப சுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள அரசு நிர்வகிக்குமா அல்லது திருவாதாங்கூர் அரச குடும்பத்தினர் வசமே செல்லுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், கோயில் பொதுச் சொத்தாக இருக்குமா அல்லது திருப்பதி ஏழுமலையான் கோயிலை போன்று தேவஸ்தான வாரியம் நிறுவப்படுமா என்றும் இன்று நீதிமன்றம் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments