...
|ஜூலை 12,2020
நாடு முழுதும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஏழு லட்சத்தில் இருந்து, நான்கே நாட்களில், எட்டு லட்சத்தை கடந்து உள்ளது.
இதுவரை இல்லாத வகையில், நேற்று ஒரே நாளில், 27 ஆயிரம் பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றில் இருந்து, நாடு முழுதும், ஐந்து லட்சத்து, 15 ஆயிரத்து, 385 பேர் மீண்டுள்ளனர்.
தற்போது, 2.83 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்களின் விகிதம், 63சதவீதமாக உள்ளது.நாடு முழுதும், நேற்று முன்தினம் வரை, 1.13 கோடி பேருக்கு, பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் மட்டும், 2.82 லட்சம் பேருக்கு, பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டு உள்ளது.
நேற்று, மஹாராஷ்டிராவில், 226; தமிழகத்தில், 64; கர்நாடகத்தில், 57 என, நாடு முழுதும், 519 பேர் உயிரிழந்தனர்.இதன் மூலம், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை, 22 ஆயிரத்து, 123 ஆக அதிகரித்துஉள்ளது.பாதிப்பை பொறுத்தவரை, நேற்று ஒரே நாளில், 27 ஆயிரத்து, 114 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, எட்டு லட்சத்து, 20 ஆயிரத்து, 916 ஆக உயர்ந்துள்ளது.பாதிப்பு எண்ணிக்கை, ஏழு லட்சத்தை கடந்து, நான்கு நாட்களே ஆன நிலையில், தற்போது அது எட்டு லட்சத்தை கடந்திருப்பது, மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது

0 Comments