Ticker

6/recent/ticker-posts

Ad Code

வைரங்கள் பதிக்கப்பட்ட முகக் கவசம்

...



 |ஜூலை 12,2020


Advertisement

Advertisement


Share     
சூரத்: 'கொரோனா' வைரஸ் பரவலுக்கு மத்தியில், குஜராத்தில் உள்ள ஒரு நகைக் கடையில், வைரங்கள் பதிக்கப்பட்ட முகக் கவசங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த முகக் கவசங்கள், 4 லட்சம் ரூபாய் வரைவிற்கப்படுகின்றன.குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 40 ஆயிரத்தை கடந்துள்ளது.இதற்கிடையே வைரஸ் பரவலை தடுக்க, மாநில அரசு, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள போதிலும், மக்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.முடிவுவெளியே செல்லும்போது முகக் கவசம் அணியவேண்டும் என, மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், இங்குள்ள சூரத் நகரில் இருக்கும் நகைக் கடை ஒன்றில், வைரங்கள் பதிக்கப்பட்ட முகக் கவசங்கள், அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.இவை, ஒன்றரை லட்சம் முதல், 4 லட்சம் ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.இது குறித்து, கடையின் உரிமையாளர் தீபக் சோக்சி கூறியதாவது:ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், ஒத்தி வைக்கப்பட்டிருந்த திருமணங்களை நடத்த, பலரும் முடிவு செய்துள்ளனர்.அதன்படி, ஒரு வாடிக்கையாளர், எங்கள் கடைக்கு வந்து, தங்கள் வீட்டு திருமணத்தில், மணமக்கள் அணிவதற்கு, தனித்துவமான முகக் கவசங்கள் வேண்டும் என, கோரினார்.ஆகையால், எங்கள் வடிவமைப்பாளர்கள் உதவியுடன், வைரங்கள் பதிக்கப்பட்ட முகக் கவசங்களை உருவாக்கி, அந்த வாடிக்கையாளரிடம் வழங்கினோம்.வரும் நாட்களில், இதுபோன்ற முகக் கவசங்கள் மக்களுக்கு தேவைப்படும் என்பதால், பலவிதமான முகக் கவசங்களை தயார் செய்துள்ளோம்.சுத்தமான வைரங்கள்தங்கத்துடன், சுத்தமான வைரங்கள் மற்றும் அமெரிக்க வைரங்களை பயன்படுத்தி, இந்த முகக் கவசங்களை தயாரித்து உள்ளோம்.மஞ்சள் தங்கத்துடன், அமெரிக்க வைரக் கற்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள முகக் கவசத்தின் விலை, ஒன்றரை லட்சம் ரூபாயாகும்.அதேபோல், வெள்ளை தங்கம் மற்றும் சுத்தமான வைரங்களால் உருவாக்கப்பட்டுள்ள முகக் கவசம், 4 லட்சம் ரூபாய் மதிப்பாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

0 Comments