Ticker

6/recent/ticker-posts

Ad Code

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

ற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் 9 சென்டி மீட்டரும் கேளம்பாக்கத்தில் 8 சென்டி மீட்டரும் மீனம்பாக்கத்தில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

ஜூலை 17-ம் தேதி வரை தென்கிழக்கு தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்றுக்கு வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments