இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கண்காணிக்க Finger Pulse Oximeter கருவி பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் தேவையை அறிந்த முதல்வர் பழனிசாமி தமிழ்நாடு மருத்துவ பணிகள் சேவை கழகத்தின் மூலமாக 43,000 Finger Pulse Oximeter கருவிகளை கொள்முதல் செய்ய உத்தரவிட்டதாகவும், அதன்படி 23,000 கருவிகள் தமிழகம் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள கருவிகள் ஓரிரு நாளில் பெறப்படும் எனவும் தேவையின் அடிப்படையில் இக்கருவிகள் கூடுதலாக கொள்முல் செய்யப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இக்கருவியை கொண்டு வீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று அவர்கள் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கண்காணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments