தமிழகத்தில் மார்ச் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரையில் தமிழ்நாடு பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 12-ம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற்றது. முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.
இதில் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. திருப்பூர் 97.12 சதவிகிதமும், ஈரோடு 96.99 சதவிகிதமும், கோவை 96.39 சதவிகிதமும் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு எழுதிய 7,99,717 மாணவ மாணவியர்களில், மாணவியர் 4,24,785 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல மாணவர்கள் 3,55,646 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.இந்த ஆண்டு அரசுப் பள்ளிகள் 85.94 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தனியார் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 98.70 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாகும்.
பாட வாரியாக தேர்ச்சி விகிதம்
இயற்பியல் - 95.94
வேதியியல் - 95.82
கணிதம் - 96.3
தாவரவியல் - 93.95
விலங்கியல் - 92.97
0 Comments