இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியா முழுவதும் முடங்கியுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் மாத இடையில் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் தற்போது வரை திறக்க முடியாத சூழல் உள்ளது. கடந்த கல்வி ஆண்டில் தேர்வு எழுதாத வகுப்புகளுக்கு தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த கல்வி ஆண்டு மாணவர்களின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. எப்போது பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரியாத சூழல் உள்ளது.
இந்தநிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த முடிவு செய்துள்ள சூழலில், அரசுப் பள்ளிகள் தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை நடத்த முடிவு செய்துள்ளன. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும், மேலும் 14 தனியார் தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் வீடியோ வடிவில் வழங்கப்படவுள்ளது.அதற்காக சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஸ்டியோ தயார் செய்யப்பட்டு பாடங்கள் வீடியோ வடிவில் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோக்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்று முதல், 12-ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வரச் சொல்லி வீடியோவை பதிவிறக்கம் செய்து அளிக்கவுள்ளனர்.
0 Comments