இந்தியாவுடனான சபஹார் ரயில்வே திட்டத்தை ஈரான் நாடு ரத்து செய்துள்ள நிலையில், இலங்கையும் கொழும்பு துறைமுகத் திட்டத்தை மறுபரீசிலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் முக்கிய துறைமுகமான சபஹாரில் இருந்து ஆப்கானிஸ்தான் எல்லை வரை இந்தியா சார்பாக ரயில்வே பாதை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர் ஆகியோர் இடையே கடந்த 2016ம் ஆண்டு இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது.
Also read: அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்த லாரிஆனால், நான்கு ஆண்டுகள் ஆகியும் இதற்கான நிதி உதவிகளை இந்தியா வழங்காமல் இருந்ததாக ஈரான் குற்றம்சாட்டி வந்த நிலையில், இந்தியாவின் உதவியின்றி ஈரான் ரயில்வே அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.
சீனாவுடன் ரூபாய் 30 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தத்தை ஈரான் கையெழுத்திட்டிருக்கும் சூழலில், இந்தியாவுடனான ஒப்பந்தத்தை ஈரான் கைவிட்டுள்ளது.
இதனிடையே, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவும், இந்தியாவுடனான கொழும்பு துறைமுகத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து வருகிறார். இந்தத் திட்டத்தை இந்தியாவுக்கு பதில் சீனாவுக்கு வழங்க இலங்கை முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
0 Comments